Tuesday, January 31, 2012

ருஷ்டியின் நாவல் முஸ்லிம்களுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது – கட்ஜு

கட்ஜு
புதுடெல்லி:சர்ச்சைக்குரிய எழுத்தாளர் சல்மான் ருஷ்டி ‘சாத்தானின் வசனங்கள்’ என்ற நாவல் மூலம் இஸ்லாம் மற்றும் நபிகளார் மீது தாக்குதல் நடத்தினார் என்றும், இது முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு ஆழமான காயத்தை ஏற்படுத்தியது என்றும் ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியாவின் சேர்மனும், முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியுமான மார்க்கண்டேய கட்ஜு கூறியுள்ளார்.

சர்ச்சைக்குரிய நாவல் மூலம் ருஷ்டி மில்லியன் கணக்கில் டாலர்களை சம்பாதித்து இருக்கலாம். ஆனால், இந்நாவல் முஸ்லிம்களின் உணர்வுகளை காயப்படுத்தியது. தனிநபர் கருத்து சுதந்திரம் என்பது பொது நலனுக்கு பொருத்தமாக இருக்கவேண்டும்.

புக்கர் பரிசு கிடைத்துவிட்டதால் சல்மான் ருஷ்டியால் மகான் ஆகமுடியாது. இதுவரை இலக்கிய நோபல் பரிசு பெற்ற 100 எழுத்தாளர்களில் 80 க்கும் அதிகமான நபர்களை யாரும் நினைவு கூறவில்லை.

ஜெய்ப்பூர் இலக்கிய மாநாட்டில் ருஷ்டியின் சர்ச்சை ஆதிக்கம் செலுத்தியதன் பின்னணியில் ஹிந்துக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே பிரிவினையை ஏற்படுத்துவதற்கா? என்பது குறித்து சந்தேகம் எழுகிறது என்று கட்ஜு கூறினார்.

ருஷ்டி ஒரு தரம் தாழ்ந்த எழுத்தாளர் என கடந்த வாரம் கட்ஜு விமர்சித்து இருந்தார். நியூயார்க்கிலும், லண்டனிலும் உள்ள எழுத்தாளர்கள் சிறந்தவர்கள் என்றும், இந்தியாவில் உள்ள எழுத்தாளர்கள் தரம் தாழ்ந்தவர்கள் என்ற காலனியத்துவ காலக்கட்ட தாழ்வு மனப்பான்மை கல்வி கற்ற இந்தியர்களிடையே நிலவுவதாக அப்போது கட்ஜூ கூறியிருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza