பெய்ரூத்:தெற்கு லெபனானில் ஐதா ஷஆப் நகரத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது. வடக்கு இஸ்ரேலை நோக்கி பல தடவை லெபனானில் இருந்து ராக்கெட் தாக்குதல் நடந்ததாக குற்றம் சாட்டி ஏவுகணைத் தாக்குதலை நடத்தியுள்ளது இஸ்ரேல். தாக்குதலில் கட்டிடங்கள் சேதமடைந்துள்ளது என்றும், ஆட்களுக்கு அபாயமில்லை எனவும் லெபனான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளையில், இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தொடர்பில்லை என ஹிஸ்புல்லாஹ் அறிவித்துள்ளது. 2006-ஆம் ஆண்டு 34 தினங்கள் நீண்ட ஹிஸ்புல்லாஹ்-இஸ்ரேல் போருக்கு பிறகு இரு நாடுகளின் எல்லைப் பகுதிகள் தற்பொழுது அமைதியாக இருந்தாலும் அறிக்கைப் போர்கள் அடிக்கடி நடைபெற்றுவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment