டெஹ்ரான்:ஈரான் தலைநகரான டெஹ்ரானில் பிரிட்டன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அந்நாட்டின் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். பிரிட்டன் தூதரகத்திற்குள் அத்துமீறி நுழைந்த மாணவர்கள் அங்கு நாட்டப்பட்டிருந்த பிரிட்டன் கொடியை எரித்துவிட்டு ஈரான் கொடியை ஏற்றினார்.
தூதரகத்தின் மீது மக்கள் கற்கள் வீசுவது, ஜன்னல் கண்ணாடிகள் உடைந்த காட்சி ஆகியவற்றை தேசிய தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
அணுசக்தி திட்டம் தொடர்பாக ஈரான் மீது தடை ஏற்படுத்தும் பிரிட்டனின் திட்டத்தை தொடர்ந்து அந்நாட்டுடனான உறவை குறைத்துக்கொள்வதாக ஈரான் தீர்மானித்ததை தொடர்ந்து தூதரகம் மீது மாணவர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். போலீசார் மாணவர்களின் போராட்டத்தை தடுத்ததை தொடர்ந்து மோதல் உருவானது.
பிரிட்டன் தூதரகத்தை இழுத்து மூடுங்கள், இங்கிலாந்து ஒழியட்டும் போன்ற கோஷங்களை மாணவர்கள் எழுப்பினர் என எ.எஃப்.பி கூறுகிறது. தூதரகம் தாக்கப்பட்டதற்கு பிரிட்டன் வெளியுறவுத்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஈரான் வங்கிகளுக்கு தடை விதிக்க பிரிட்டனின் நிதித்துறை கடந்த வாரம் தீர்மானித்தது. இதனை கண்டித்து பிரிட்டனுடன் தூதரக உறவை குறைத்துக்கொள்ள ஈரான் பாராளுமன்றம் அங்கீகாரம் அளித்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment