Wednesday, November 30, 2011

நார்வே:77 பேரை படுகொலை செய்த ப்ரெவிக்கிற்கு பைத்தியமாம் – அறிக்கை கூறுகிறது

brevik
ஓஸ்லோ:நார்வே கொலையாளி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக் சித்த பிரமை பிடித்துள்ளது என மனோதத்துவ அறிக்கை கூறுகிறது.

ப்ரெவிக்கை பரிசோதித்த மனோதத்துவ நிபுணர்கள்தாம் இதனை தெரிவித்துள்ளனர். கூட்டுப் படுகொலைகளை நிகழ்த்தும் வேளையில் கற்பனையான எண்ணங்களை கொண்ட ஒரு குறிப்பிட்ட மனோநிலையில் ப்ரெவிக் இருந்ததாக இரண்டு மனோதத்துவ நிபுணர்கள் இணைந்து தயாரித்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ப்ரெவிக்குடன் நடத்திய 13 நேர்முகங்களின் அடிப்படையில் தயார் செய்யப்பட்டுள்ள 243 பக்கங்களை கொண்ட அறிக்கையில் எதார்த்தமான சூழல்களுடன் தொடர்பில்லாத அபத்தமான எண்ணங்களின் உலகில் ப்ரெவிக் வாழ்வதாக அந்த அறிக்கை கூறுகிறது. 77 பேரை அநியாயமாக படுகொலை செய்த வழக்கில் விசாரணை துவங்கவிருக்கும் வேளையில் இந்த அறிக்கையை நார்வே ஃபாரன்சிக் மெடிசின் அதிகாரிகள் பரிசோதிப்பார்கள்.

அறிக்கையில் கூறப்பட்டவை உறுதிச் செய்யப்பட்டால் ப்ரெவிக்கின் சிறைத்தண்டனை ரத்துச்செய்யப்பட்டு மனநிலை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவான்.

கடந்த ஜூலை மாதம் 22-ஆம் தேதி போலீஸ் ஆபிஸராக போலியான வேடமணிந்து உட்டோயோ தீவில் லேபர் கட்சியின் இளைஞர் முகாமில் நுழைந்து ப்ரெவிக் சரமாரியாக துப்பாக்கியால் சுட்டான். துப்பாக்கிச்சூட்டில் 69 பேர் மரணமடைந்தனர். அதற்கு சற்று முன்பு தலைநகர் ஓஸ்லோவில் நடத்திய கார் குண்டுவெடிப்பில் எட்டு பேர் கொல்லப்பட்டனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza