ராமல்லா:இஸ்ரேல் சிறையிலிருந்து விடுதலையாகி வீடு திரும்பிய ஃபலஸ்தீன் இளைஞரின் வீடு மீது ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் சட்ட விரோதமாக வசிக்கும் இஸ்ரேலிய யூதர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
தெற்கு மேற்கு கரை நகரமான ஹெப்ரானில் உள்ள ஃபலஸ்தீன் இளைஞர் ஹானி ஜாபிரின் வீடு மீதுதான் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இவர் ஹமாஸ்-இஸ்ரேல் இடையே நடந்த கைதிகள் பரிமாற்ற ஒப்பந்தத்தின் மூலம் விடுதலையானவர் ஆவார். இஸ்ரேலைச் சார்ந்த சட்ட விரோதமாக குடியமர்ந்த நபரை கொலைச் செய்ததாக குற்றம் சாட்டி 18 ஆண்டுகள் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஜாபிரை விடுதலைச் செய்ததை கண்டித்து சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.
35 வயதான ஜாபிர் நூற்றுக்கணக்கான ஃபலஸ்தீன் கைதிகளுடன் கடந்த அக்டோபரில் விடுதலையாகி வீட்டிற்கு திரும்பினார். ஆனால், ஜாபிர் திரும்பியதை தொடர்ந்து சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் உள்ளூர்வாசிகளான ஃபலஸ்தீன் மக்கள் மீது தீவிரமாக தாக்குதலை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாகத்தான் ஜாபிர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. ஜாபிரை கொலைச் செய்பவருக்கு ஒரு லட்சம் அமெரிக்க டாலர் பரிசு தருவதாக சட்டவிரோத இஸ்ரேலிய குடியேற்றக்காரர்கள் அறிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment