ஸ்ரீநகர்:ஜம்மு-கஷ்மீர் மாநிலத்தில் சமூக இணையதளமான ஃபேஸ்புக்கிற்கு தடைவிதிப்பது குறித்து மாநில அரசு பரிசீலித்த வருகிறது. இணையதளத்தின் உள்ளடக்கம் கஷ்மீரில் மீண்டும் பிரச்சனையை உருவாக்கும் எனவும், ஆதலால் ஃபேஸ்புக்கை தடைச் செய்யவேண்டும் என போலீஸ் மாநில அரசிற்கு பரிந்துரைச் செய்துள்ளது என அதிகாரிகள் கூறுகின்றனர்.
சைபர் குற்றங்கள் போலீசாருக்கு பெரும் சவாலாக திகழ்வதாக டி.ஜி.பி குல்தீப் கோதா அண்மையில் ஒப்புக்கொண்டிருந்தார். இத்தகைய குற்றங்களை கண்டறிய ஸ்ரீநகர், ஜம்மு க்ரைம் தலைமையகம் ஆகியவற்றில் மூன்று சைபர் போலீஸ் ஸ்டேசன்களை நிறுவப்போவதாக அவர் தெரிவித்தார். தொடர்ச்சியான மூன்று ஆண்டுகளுக்கு பிறகு இந்த கோடை காலத்தில்தான் கஷ்மீர் அமைதியாக இருந்துள்ளது.
கஷ்மீர் இளைஞர்கள் சோஷியல் மீடியா வழியாக துவக்கிய ஆன்லைன் ‘இன்திபாழா(எழுச்சி)’ கடந்த ஆண்டு கஷ்மீரில் நடந்த போராட்டங்களுக்கு காரணமானது என போலீஸ் சுட்டிக்காட்டுகிறது. ஃபேஸ்புக் அமைதிக்கு பெரும் சவாலாக திகழ்வதாக அதிகாரிகள் கருதுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment