திரிபோலி:லிபியாவின் முன்னாள் அதிபர் முஅம்மர் கத்தாஃபியின் மூத்த மகனும், அவருடைய வலதுகரமாக செயல்பட்டவருமான ஸைஃபுல் இஸ்லாம் தெற்கு லிபியாவின் உபாரியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
உபாரியில் பாலைவனத்தில் வைத்து மூன்று மெய்க்காப்பாளர்களுடன் ஸைஃபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டார் என லிபியாவின் சட்ட அமைச்சர் முஹம்மது அல் அல்காயி கூறுகிறார். பெரிய அளவிலான எதிர்ப்பு தெரிவிக்காமலேயே ஸைஃபுல் இஸ்லாம் கைது செய்யப்பட்டுள்ளார். மனித குலத்திற்கு எதிரான குற்றத்திற்காக ஸைஃபுல் இஸ்லாம் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கைது வாரண்ட் பிறப்பித்திருந்தது.
கத்தாஃபியின் ஆட்சியில் உளவுத்துறை தலைவராக பதவி வகித்த ஸைஃப் லிபியாவை விட்டு வெளியேறியதாக செய்திகள் வெளியான சூழலில் கைது செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்ணாமிக்ஸில் பொருளாதார துறையில் முனைவர் பட்டம் பெற்றுள்ள ஸைஃபுல் இஸ்லாம் கத்தாஃபியின் நம்பிக்கைக்குரிய நபராக கருதப்படுகிறார். ஸைஃபின் மூன்று சகோதரர்கள் வெவ்வேறான தாக்குதல்களில் முன்னரே கொல்லப்பட்டனர். இன்னொரு சகோதரரான ஸாதி நைஜரில் உள்ள அகதிகள் முகாமில் வாழ்ந்து வருகிறார்.
0 கருத்துரைகள்:
Post a Comment