ராமல்லா(மேற்கு கரை):காஸ்ஸாவில் ஐ.நா புலன்பெயர்ந்தோர் முகாமில் வசிக்கும் ஃபலஸ்தீன் குழந்தைகளுக்காக இந்தியா 10 லட்சம் டாலர் தொகையை வழங்கியுள்ளது. வெளியுறவுத்துறை அமைச்சர் இ.அஹ்மத் ஐ.நா ஏஜன்சி கமிஷனர் ஜெனரல் ஃபிலிப்போ க்ரான்டிக்கு 10 லட்சம் டாலருக்கான தொகையை செக்காக வழங்கினார்.
முகாமில் வசிக்கும் குழந்தைகளுக்கு உணவை அளிப்பதற்கான தேவைகளுக்காக 2011-12 வருடத்திற்கான இந்தியாவின் நன்கொடை என இ.அஹ்மத் தெரிவித்துள்ளார். காஸ்ஸாவில் ஐ.நா பள்ளிக்கூடங்களில் பயிலும் 76 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களின் 50 தினங்களுக்கான தேவைகளுக்கு இந்த தொகை விநியோகிக்கப்படும். துயரங்களை அனுபவித்துவரும் ஃபலஸ்தீன் மக்களுக்காக சேவையாற்றும் ஐ.நா ஏஜன்சிக்கான இந்தியாவின் உதவி தொடரும் என இ.அஹ்மத் தெரிவித்தார்.
மேற்காசியாவில் 50 லட்சம் ஃபலஸ்தீன் புலன்பெயர்ந்தோர் ஐ.நா ஏஜன்சியின் கட்டுப்பாட்டிலுள்ள முகாமில் வசிக்கின்றனர். இந்தியா-பிரேசில்-தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளின் உதவியுடன் ராமல்லாவில் நிறுவப்பட்டுள்ள ஸ்போர்ட்ஸ் சென்டர் திறப்பு விழாவில் இ.அஹ்மத் கலந்துக்கொண்டார். அவர் இரண்டு தினங்கள் ஃபலஸ்தீன் சுற்றுப்பயணத்திற்கு சென்றுள்ளார். ஃபலஸ்தீனுக்கு எல்லாவித உதவிகளையும் இந்தியா அளிக்கும் என கூறிய இ.அஹ்மத், ஃபலஸ்தீன் ஆணையம்-இஸ்ரேல் நேரடியான பேச்சுவார்த்தை நடத்தவேண்டுமென கோரிக்கை விடுத்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment