குவைத்:பாராளுமன்றத்தில் போலீசாருடன் நடந்த மோதலை தொடர்ந்து கைது செய்யப்பட்ட 20 குவைத் எதிகட்சி தொண்டர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்டவிரோத காவல் மற்றும் போலீசாரின் கொடூரமான நடவடிக்கைகள் ஆகியவற்றை கண்டித்து இவர்கள் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளதாக எதிர்கட்சி ஆதரவாளர்கள் சோசியல் இணையதளமான ட்விட்டரில் கூறியுள்ளனர்.
குற்றவாளிகளை அடைத்துவைக்கும் சிறையில் எதிர்கட்சி தொண்டர்கள் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும், உறவினர்களை தொடர்பு கொள்ள அனுமதி வழங்கப்படவில்லை என்றும் எதிர்கட்சி ஆதரவாளர்கள் கூறுகின்றனர். இம்மாதம் 16-ஆம் தேதி கைது செய்யப்பட்ட 31 பேரின் காவலை நீட்டியதை தொடர்ந்து இவர்கள் உண்ணாவிரதத்தை துவக்கியுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக நூற்றுக்கணக்கான எதிர்கட்சி தொண்டர்கள் கடுமையான குளிரையும் பொருட்படுத்தாமல் அரசு அலுவலகத்திற்கு முன்பு திரண்டிருந்தனர்.
50 உறுப்பினர்களை கொண்ட குவைத் பாராளுமன்றத்தில் 16 எம்.பிக்கள் வாக்களிக்க 35 கோடி அமெரிக்க டாலரை லஞ்சமாக பெற்றதாக குற்றம் சாட்டி கடந்த 3 மாதங்களாக குவைத் பாராளுமன்றத்தில் எதிர்ப்பு வலுத்துவருகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment