புதுடெல்லி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் தேசிய சமூக நீதி மாநாட்டிற்காக டெல்லி ராம்லீலா மைதானம் தயாராகி உள்ளது. இன்று காலை 9.30 மணிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம்.அப்துற்றஹ்மான் கொடி ஏற்றி மாநாட்டை துவக்கி வைப்பார்.
சுதந்திரத்திற்கு பிறகு ஏராளமான அரசிய, சமூக மாநாடுகளுக்கு சாட்சியம் வகித்துள்ள ராம்லீலாவில் கேராளவிலிருந்து துவங்கி தமிழகம், கர்நாடகா என தென்மாநிலங்களில் ஆழமாக கால் பதித்து வட இந்தியாவை நோக்கி காலடி தடங்களை எடுத்துவைத்துள்ள பாப்புலர் ஃப்ர்ண்ட் என்ற நவீன சமூக இயக்கம் சமூக நீதிக்காக நடத்தும் இம்மாநாடு ஏராளமான எதிர்பார்ப்புகளை அளிப்பதாக அவ்வமைப்பின் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
1857-ஆம் ஆண்டு முதல் சுதந்திர போராட்டத்தின் நூற்றாண்டு நினைவு தினம் கொண்டாடப்பட்ட 1957 மே மாதம் 10-ஆம் தேதி அன்று ராம்லீலா மைதானத்தில் மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆற்றிய உரை வரலாற்று சிறப்பு மிக்கதாகும். இந்தியாவில் நடந்துள்ள ஏராளமான போராட்டங்களுக்கு ராம்லீலா மைதானம் சாட்சியம் வகித்துள்ளது.
இன்று காலை 10 மணிக்கு ‘சக்திப்படுத்துதலை நோக்கி: எதிர்காலத்தை குறித்த கலந்துரையாடல்’(டுகெதர் ஃபார் எம்பவர்மெண்ட்:டயலாக் வித் ஃப்யூச்சர்) என்ற தலைப்பில் மில்லி கன்வென்சன் நடைபெறுகிறது. இதனை ஃபதேஹ்பூர் ஷாஹி மஸ்ஜித் இமாம் முஃப்தி முஹம்மது முகர்ரம் துவக்கி வைப்பார்.
மதியம் 2 மணிக்கு துவங்கும் ’பீப்பிள்ஸ் ரைட் டு ஜஸ்டிஸ்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பிரபல மனித உரிமை மற்றும் சமூக ஆர்வலர்கள் பங்கேற்கின்றனர். நாளை மதியம் 1 மணிக்கு பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூர், ராஜஸ்தான் உள்பட இந்தியாவின் 17 மாநிலங்களைச் சார்ந்த பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் மாநாட்டுத் திடலுக்கு வருகைத் தந்துள்ளதாக மாநாட்டில் தங்குமிட வசதிகளுக்கான பொறுப்பாளர் ஹாமித் முஹம்மது கூறுகிறார். பல்வேறு மாநிலங்களைச் சார்ந்த 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாலண்டியர்கள் சேவையாற்றுவதாக நிர்வாகிகள் கூறுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment