Saturday, November 26, 2011

ஈரானில் 12 சி.ஐ.ஏ உளவாளிகள் கைது

imagesCAZ286ZI

டெஹ்ரான்:ஈரானின் ராணுவத்தைக குறித்தும், அணுசக்தி திட்டத்தை குறித்தும் உளவறிந்த அமெரிக்காவின் உளவுத்துறையான சி.ஐ.ஏவின் 12 உளவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஈரானின் தேசிய-பாதுகாப்பு வெளியுறவு விவகார பாராளுமன்ற குழு உறுப்பினர் பர்வேஸ் ஸுரூரியை மேற்கோள்காட்டி அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் இத்தகவலை வெளியிட்டுள்ளது.

இஸ்ரேல் உளவு அமைப்பான மொஸாத் மற்றும் பிராந்தியத்தில் இதர சில உளவு அமைப்புகளுடன் சேர்ந்து சி.ஐ.ஏ குழு ஈரானில் செயல்பட்டுள்ளதாக ஸுரூரி குற்றம் சாட்டியுள்ளார்.

இஸ்ரேலும், அமெரிக்காவும் இணைந்து ஈரானுக்கு எதிராக நாட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் நடத்தி வரும் சதித் திட்டத்திற்கான ஆதாரம்தான் சி.ஐ.ஏ உளவாளிகளின் கைது. சமயோஜிதமாக ஈரானின் ரகசிய புலனாய்வு ஏஜன்சிகள் செயல்பட்டதால் இவர்களை விரைவில் கைது செய்ய முடிந்தது என ஸுரூரி கூறினார். ஆனால், கைது செய்யப்பட்ட சி.ஐ.ஏ ஏஜண்டுகள் எந்த நாட்டைச் சார்ந்தவர்கள் என்பதை ஸுரூரி வெளியிட மறுத்துவிட்டார்.

சி.ஐ.ஏவின் நெட்வர்க்கை முறியடித்ததாக லெபனானில் செயல்படும் ஹிஸ்புல்லாஹ் இயக்கம் அறிவித்ததை தொடர்ந்து ஈரானும் இதே போன்றதொரு தகவலை வெளியிட்டுள்ளது.

கடந்த மே மாதம் ஈரான் 30 சி.ஐ.ஏ உளவாளிகளை கைது செய்தது. உளவாளிகள் கைது தொடர்பாக அமெரிக்கா பதிலளிக்கவில்லை. ஹிஸ்புல்லாஹ்வின் கூற்றை முதலில் மறுத்த அமெரிக்கா பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டது. ஹிஸ்புல்லாஹ்வின் தலைவர் ஹஸன் நஸ்ருல்லாஹ் ஜூன் மாதம் அமெரிக்காவின் உளவாளிகளை குறித்து எச்சரிக்கை விடுத்திருந்தார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza