டமாஸ்கஸ்:அமைதியை நிலைநாட்ட அரபு லீக் முன்வைத்த பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுகிறதா? என்பதை கண்காணிக்க அமைப்பின் பார்வையாளர்கள் குழுவை சிரியா அங்கீகரித்துள்ளது. சிரியாவின் தீர்மானம் அரபு லீக்கிடம் தெரிவித்திருப்பதாக தூதரக பிரதிநிதி பி.பி.சியிடம் தெரிவித்துள்ளார்.
அரபு லீக்கின் பரிந்துரைகளை அமுல்படுத்த சில திருத்தங்கள் தேவை என சிரியா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிவிலியன்களுக்கு எதிரான ராணுவ நடவடிக்கையை முடிவுக்கு கொண்டுவர மேலும் 3 தினங்கள் கால அவகாசத்தை சிரியாவுக்கு அரபு லீக் அளித்தது. இல்லையெனில் தடை ஏற்படுத்தப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
நகரங்களில் இருந்து ராணுவத்தை வாபஸ் பெறுதல், எதிர் கட்சிகளுடன் இரண்டு வாரத்திற்குள் பேச்சுவார்த்தை நடத்துவது ஆகியன அரபு லீக் முன்வைத்த பரிந்துரைகளில் முக்கியமானவை ஆகும். சிரியாவின் ஏகாதிபத்தியவாதி பஸ்ஸாருல் ஆஸாத் இத்திட்டத்தை அங்கீகரித்த போதிலும் இதுவரை அதனை அமுல்படுத்தவில்லை.
இதற்கிடையே, தர்ஆவில் ராணுவம் நடத்திய தாக்குதலில் இரண்டு குழந்தைகள் உள்பட 14 பேர் கொல்லப்பட்டனர். தால் மின்னிஜ், மார்ஷம்ஷா ஆகிய கிராமங்களில் ராணுவம் கடுமையான தாக்குதல் நடத்தியதாக ராய்ட்டர்ஸ் கூறுகிறது.
0 கருத்துரைகள்:
Post a Comment