Saturday, November 19, 2011

வால்ஸ்ட்ரீட் போராட்டம்: அமெரிக்காவில் நூற்றுக்கணக்கானோர் கைது

imagesCA744O6C
வாஷிங்டன்:வால்ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு போராட்டம் துவங்கி இரண்டு மாதம் முடிவடைவதை தொடர்ந்து அமெரிக்காவின் நகரங்களில் நடந்த கார்ப்பரேட் தரகு முதலாளிகளுக்கு எதிரான பேரணியில் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர்.

நியூயார்க்கில் ப்ரூக்ளின் பாலத்தின் வழியாக நடந்த பேரணியில் ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்துக்கொண்டனர். நியூயார்க்கில் மட்டும் முன்னூறு பேர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

பங்கு சந்தைக்கு அருகே வைத்து ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர். போலீஸார் கொடூரமாக தாக்கியதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இரத்தம் சிந்த நிற்கும் நபரின் புகைப்படத்தை தொலைக்காட்சி சேனல்கள் வெளியிட்டுள்ளன. ஐந்து போலீஸ் காரர்களுக்கு காயம் ஏற்பட்டது. ப்ரூக்ளின் பாலத்தை கடக்கும் வேளையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கைதுச் செய்யப்பட்டனர்.

மன்ஹாட்டனில் ஃபோளி சதுக்கத்தில் திரண்டிருந்த எதிர்ப்பாளர்கள் அரசு அலுவலகங்களை சுற்றி வளைத்தனர். இங்கே எதிர்ப்பாளர்களை தடுக்கும் முயற்சி தோல்வியை தழுவியதை அடுத்து போலீசாருக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

லாஸ் ஏஞ்சல்ஸில் வங்கி எதிர்ப்பு முழக்கங்களை எழுப்பி போராட்டம் நடத்திய ஐந்நூறு பேரை போலீஸார் தடுத்து நிறுத்தினர். டல்லாஸில் எதிர்ப்பாளர்களின் முகாம்களை அதிகாரிகள் அகற்றினர். போர்ட்லாண்டிலும் ஏராளமானோர் கைதுச் செய்யப்பட்டுள்ளனர்.

லாஸ் வேகாஸ், மிசூரி ஆகிய நகரங்களில் நூற்றிற்கும் மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர். ஷிக்காகோ, இல்லிநோய், ஸீட்டல் ஆகிய இடங்களிலும் பேரணி நடத்தப்பட்டது. போஸ்டன், மாசேசூட்ஸ், ஃப்ளோரிடா ஆகிய இடங்களில் வேலை வாய்ப்புகளும், அடிப்படை வசதிகளையும் கோரி போராட்டம் நடைபெற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza