Sunday, November 27, 2011

எனக்கு பின்னால் ரகசிய சக்திகள் இல்லை – இம்ரான்கான்

ImranKhan

பெஷாவர்:’எனது அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு பின்னணியில் எந்த ரகசிய சக்தியும் இல்லை’ என தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் தலைவரும், பாக்.கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனுமான இம்ரான் கான் கூறியுள்ளார்.

பெஷாவரில் நடந்த கட்சி மாநாட்டில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் அவர். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் வளர்ச்சிக்கு தடைபோட முடியாது. இது இந்நாட்டில் உள்ள அனைவரது கட்சியாகும் என இம்ரான் கான் தெரிவித்தார். தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியின் பின்னால் தேசவிரோத சக்திகள் செயல்படுவதாக எழுந்த குற்றச்சாட்டிற்கு பதிலளித்தார் அவர். வெளிப்படையான வாக்காளர்கள் பட்டியல் தயார் செய்தால் முன்னரே தேர்தல் நடத்துவதில் தனக்கு ஆட்சேபனை இல்லை என அவர் கூறினார்.

இதற்கிடையே பாகிஸ்தான் பீப்பிள்ஸ் பார்டியின் தலைவர்களில் ஒருவரும், முன்னாள் பாக்.வெளியுறவுத்துறை அமைச்சருமான ஷா மஹ்மூத் குரைஷி தெஹ்ரீக்-இ-இன்ஸாப் கட்சியில் சேருவார் என கருதப்படுகிறது. இதுக்குறித்து அவர் இன்று அறிக்கை வெளியிடுவார் என தெஹ்ரீக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஷா மஹ்மூத் குரைஷி இவ்வருடம் துவக்கத்தில் அமைச்சரவையிலிருந்து விலகினார். பாகிஸ்தான் அரசியலில் வளர்ந்துவரும் இம்ரான் கானுக்கு ஷா மஹ்மூத் குரைஷியின் வரவு பயனளிக்கும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza