புதுடெல்லி:கறுப்பு பண வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள தொழிலதிபர் ஹஸன் அலி கான் மருத்துவமனையில் சிகிட்சையை நிராகரித்துவிட்டார். அரசுக்கு சொந்தமான ஜே.ஜே மருத்துவமனையில் ஹஸன் அலி சிகிட்சை பெற்று வருகிறார்.
ஒரு கோடி ரூபாய் அளிக்காவிட்டால் உடலில் எய்ட்ஸ் கிருமியை ஊசி மூலம் ஏற்றிவிடுவேன் என டாக்டர்களில் ஒருவர் மிரட்டியதாக ஹஸன் அலி குற்றம் சாட்டியுள்ளார். மருத்துவமனையில் அமைந்துள்ள சிறை வார்டில் இவர் சிகிட்சை பெற்று வருகிறார். ஹஸன் அலி கான் எந்த டாக்டரையும் தன்னை சிகிட்சை செய்ய அனுமதிக்க மறுப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சுவிஸ் வங்கிகளில் கறுப்புப்பணத்தை முதலீடுச் செய்துள்ளதாகவும், ரூ.70 ஆயிரம் கோடிக்கான வரி ஏய்ப்பு செய்ததாகவும் குற்றம் சாட்டி ஹஸன் அலி கான் கைதுச் செய்யப்பட்டார். தனது கட்சிதாரருக்கு கடுமையான உடல்நிலை கோளாறுகள் இருப்பதாகவும், ஆனால் மருத்துவமனையில் சிறை அதிகாரிகள் போதிய சிகிட்சையை அனுமதிப்பதில்லை என்றும் ஹஸன் அலியின் வழக்கறிஞர் செசன்ஸ் நீதிமன்றத்தில் முன்னர் புகார் அளித்திருந்தார்.
வார்டில் தனிமையில் இருந்த தன்னை டாக்டர் மிரட்டினார் என ஹஸன் அலி கூறுகிறார். இக்குற்றச்சாட்டை தொடர்புடைய டாக்டர் மறுத்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக மருத்துவமனையின் அறிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அமலாக்கப் பிரிவு கைதுச் செய்த ஹஸன் அலிக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்கிய போதிலும், உச்சநீதிமன்றம் அதனை ரத்துச் செய்தது.
0 கருத்துரைகள்:
Post a Comment