டெல்லி:மாலேகான் வெடிகுண்டு தாக்குதல் வழக்கில் கைதாகி, தாக்குதலுக்கு காரணம் ஹிந்துதுவா தீவிரவாதிகள் என்று ஒப்புக்கொண்ட பின்னர், இப்போது ஜாமீனில் வெளிவந்துள்ள ஹிந்துத்துவ தீவிரவாதி சுவாமி அசீமானந்த், ஜனாதிபதி, பிரதமர், உள்துறை அமைச்சர் மற்றும் தேசிய மனித உரிமை ஆணையம் ஆகியவற்றுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில்;’என்னை மிரட்டி வாங்கிய வாக்குமூலம் அதை, நான் பின்வாங்கிய பின்னும், எந்த நீதிமன்றமும் குறிப்பிடாதபோது எவ்வாறு அதை எடுத்துக்கொள்ளலாம்?, எப்படி தேசிய புலனாய்வு அமைப்பு மாலேகான் வழக்கில் முஸ்லிம் குற்றவாளிகளின் ஜாமீன் மனுக்களை ஏற்றுக்கொள்ளலாம், இந்த விவகாரங்களை எப்படி மத்திய அரசு அமெரிக்காவுடனும் ஐநாவுடனும் பகிர்ந்து கொள்ளலாம்?’ என கேட்டு எழுதியுள்ளார்.
‘என்ன பரிகாசமான நீதி இது. ஒரு பக்கம் என்னைப் போன்ற ஹிந்து சன்யாசிகள் நினைத்துகூட பார்க்கமுடியாத அளவுக்கு புலனாய்வு அமைப்புகளால் கொடுமை படுத்தப்படுகிறார்கள்!. இவ்வாறு மிரட்டி வாங்கிய வாக்குமூலத்தை வைத்து இன்னொரு பக்கம் முஸ்லிம் குற்றவாளிகள் ஜாமீனில் வெளிவருகிறார்கள்.
என்னை விபத்தில் சிக்கி கொலைச் செய்ய போவதாக சிபிஐ அதிகாரிகள் மிரட்டினார்கள். ஒரு ஹிந்துவாக இருப்பதினால் எனக்கு மனித உரிமை இல்லையே என்று வெட்கப்பட்டேன். என் குடும்பத்தினரை காக்கவே அவர்களுக்கு பலியானேன்’ என்று கூறியுள்ளார்.
இதே அசீமானந்த், முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான சுனில் ஜோஷிக்கு ஜூன் 2006ல் கணிசமான முஸ்லிம் மக்கள் இருக்கும் பகுதிகளில் குண்டுவைக்க ரூபாய் 25,000 வழங்கியதாக சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்ட பரத்பாய் ஒப்புக்கொண்டுள்ளதாக தேசிய புலனாய்வு அமைப்ப தெரிவித்துள்ளது.
வழக்கின் முக்கிய குற்றவாளிகளான 7 நபர்களில், சுனில்ஜோஷி மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுவிட்டார். தேவேந்தர் குப்தா, லோகேஷ் ஷர்மா, அசீமானந்த், பரத்பாய் கைது செய்யப்பட்டுள்ளனர், சந்தீப் டாங்கே மற்றும் ராமச்சந்திர கல்சங்கரா ஆகியோரை தேடிவருகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment