வாஷிங்டன்:ஜான் பெநிதெஸ், மிச்சிகன் மகாணத்தில சுகாதாரத்துறையில் பணிபுரிந்து வந்தார். அமெரிக்காவின் அதிக முஸ்லிம்களை கொண்ட மகாணத்தில் இதுவும் ஒன்று. அதிகமான மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளும் போதிலும், இங்கு செவிலியர்களுக்கு சில கட்டுப்பாடுகள் உள்ளது.
உதவிக்காக வரும் முஸ்லிம் நோயாளிகளிக்கு எதிராக எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று அவருக்கு அறிவுறுத்தி இருந்தனர். இருப்பினும் ஒரு முஸ்லிம் மேலதிகாரி, ஹிஜாபுடன் வரும் முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்கள் தொடுவதை விரும்பமாட்டார்கள் எனவே என்னிடம் அழைத்து வரும்படி கூறியுள்ளார்.
இதனை நவம்பர் 17 வரை பெநிதெஸ் கடைப்பிடித்து வந்துள்ளார். இதனிடையே ஒரு மூத்த டாக்டர், வரும் நோயாளிகள் அவர் யாராக இருப்பினும் தானே கவனிக்காமல் முஸ்லிம் மேலதிகாரியிடம் அழைத்து சென்றதற்காக இவரை பணிநீக்கம் செய்துள்ளார். இவருடைய செயற்திறனில் குறையில்லை, மாறாக முஸ்லிம் பெண்களை தனிப்பட்ட முறையில் கவனித்து கொண்டதற்காகவே இவ்வாறு செய்ததாக கூறியுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment