வாஷிங்டன்:தாலிபான்கள் தங்கள் போராட்டத்தை கைவிட்டால் மாதம் 150 அமெரிக்க டாலர் நிதியுதவி மற்றும் கொலை குற்றச்சாட்டுகளிலிருந்து பொது மன்னிப்பு வழங்கபடுமென நேட்டோ அறிவித்துள்ளதாக செய்தி குறிப்பு ஒன்று தெரிவிக்கின்றது.
அமெரிக்க, இங்கிலாந்து வீரர்களை குறிவைத்து தாலிபான்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதில் ஏராளமான வீரர்கள் கொல்லப்பட்டனர். இதை தடுப்பதற்கு அமெரிக்க தலைமையிலான நேட்டோ இதனை அறிவித்துள்ளது எனத் தெரிகிறது.
இங்கிலாந்து வீரர்களை தாக்கிய மற்றும் கொன்ற வழக்கிலும் பொது மன்னிப்பும் வழங்கப்படும் என்று காபூலில் உள்ள சர்வதேச உதவி படை மேஜர் ஜெனரல் அறிவித்துள்ளார். இவர்களுக்கு எந்த வழக்கிலும் தண்டனை வழங்கப்படாது என கூறினார்.
அமைதி ஏற்பட வேண்டும் என்றால் இதை தவிர வேறு வழியில்லை என்றார். வன்முறையை கைவிட்டு அமைதி திட்டத்துக்கு முன்வரும் தாலிபான்களிடம் விசாரணை நடத்த மாட்டோம். அதற்கு பதில் போராட்ட பாதைக்கு சென்றதற்கான காரணம் குறித்த கேள்விகளுக்கு அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.
போராட்ட களத்திலிருந்து இவர்களை வெளிகொணர்வதற்க்கு உண்டான ஒப்பந்தத்தில் இங்கிலாந்து அரசு கையெழுத்திட்டுள்ளது. இதன் மூலம் இவர்கள் சண்டையை கைவிட்டு மக்களோடு ஒன்றிணைய வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment