Sunday, November 27, 2011

மொரோக்கோ தேர்தல்:இஸ்லாமிய கட்சிக்கு வெற்றி

morocco
ரபாத்:அரசிற்கு கூடுதல் அதிகாரத்தை உறுதிச்செய்யும் புதிய அரசியல் சட்டத்தின் கீழ் மொராக்கோவில் நடந்த முதல் பாராளுமன்ற தேர்தலில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் பார்டி(பி.ஜெ.டி) பெருவாரியான இடங்களை கைப்பற்றியுள்ளது.

முதல் கட்ட தேர்தல் முடிவுகள் வெளியானபோது 395 உறுப்பினர்களை கொண்ட பாராளுமன்றத்தில் பி.ஜெ.டி 80 இடங்களை கைப்பற்றியுள்ளது. இக்கட்சி அதிக இடங்களை கைப்பற்றிய கட்சியாகும் என உள்துறை அமைச்சர் தய்யிப் ஷெர்காவி அறிவித்துள்ளார். இறுதி முடிவுகள் இன்று அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

கட்சியை ஆதரித்த மொரோக்கோ மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாக தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு பி.ஜெ.டி தலைவர் அப்துல் இலாஹ் பின் கிரான் அறிவித்துள்ளார்.முன்னர் மொராக்கோ தேசிய தொலைக்காட்சி பி.ஜெ.டி 40 சதவீத வாக்குகளை பெற்றுள்ளதாக அறிவித்தது. வெற்றி அதிகாரப்பூர்வமாக உறுதிச்செய்ததன் மூலம் அரபுலக ஜனநாயக போராட்டம் துவங்கியதற்கு பிறகு ஆட்சியை பிடிக்கும் இரண்டாவது இஸ்லாமிய கட்சியாக மாறியுள்ளது பி.ஜெ.டி. ஏற்கனவே துனீசியாவில் இஸ்லாமிய கட்சியான அந்நஹ்ழா ஆட்சியை பிடித்தது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza