புதுடெல்லி:கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவம் சதித் திட்டமாக இருக்காது மோடி அரசால் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி சஞ்சீவ் பட் தெரிவித்துள்ளார்.
கோத்ரா ரெயில் திரும்பி வருவது குறித்து எவருக்கும் எந்தவொரு விபரமும் கிடைக்கவில்லை. இச்சம்பவம் புலனாய்வு ஏஜன்சிகளின் தோல்வியாகும். ரெயில் திரும்பி வருவது குறித்து அவர்களுக்கும் எத்தகவலும் கிடைக்கவில்லை என சஞ்சீவ் பட் கூறினார்.
மனித உரிமை ஆர்வலர்களும், அமைப்புகளும் ஒன்றிணைந்த அமைப்பான ‘ஹியூமன் ரைட்ஸ் டிஃபண்டர்ஸ் அலர்ட் இந்தியா’ வின் மாநாட்டில் உரை நிகழ்த்தினார் அவர். தன்னுடைய உயிர் மட்டுமல்ல இதர பல மனித உரிமை ஆர்வலர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது என சஞ்சீவ் பட் கூறினார்.
உளவுத்துறையினர் பல இளைஞர்களை கஸ்டடியில் எடுத்துள்ளனர். ஆனால் அவர்களில் பலரும் எங்கே இருக்கிறார்கள் என்ற விபரம் கூட இல்லை என ஜம்மு-கஷ்மீரை சார்ந்த எ.பி.டி.பி என்ற அமைப்பின் உறுப்பினரான ப்ரவீணா கூறினார்.
பல வருடங்களாக போலீஸ் காவலில் இருக்கும் தனது சகோதரியின் உயிரின் பாதுகாப்பை உறுதிச் செய்வதற்காக தான் தொடர்ந்து அவரை பின்தொடர்ந்து வருவதாக மணிப்பூர் இரோம் ஷர்மிளாவின் சகோதரர் இரோம் சிங்ஜித் கூறினார்.
0 கருத்துரைகள்:
Post a Comment