புதுடெல்லி:குஜராத் மாநிலத்தில் போலி என்கவுண்டர் நிபுணர் டி.ஜி.வன்சாராவுக்கும், அவரது கும்பலுக்கும் முஸ்லிம்களை கொலைச் செய்வதற்கு உதவியாக இண்டலிஜன்ஸ் அறிக்கையை தயார் செய்த குஜராத் இண்டலிஜன்ஸ் பீரோ(ஐ.பி) முன்னாள் இயக்குநர் ராஜேந்திர குமாரிடம் விசாரணை நடத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நரேந்திரமோடிக்கு நெருக்கமானவரான ராஜேந்திரகுமார், வன்சாராவுக்கும் அவரது கும்பலுக்கும் தேவையான போலி இண்டலிஜன்ஸ் அறிக்கைகளை தயார் செய்து அளித்தார் என குஜராத் முன்னாள் டி.ஜி.பி ஆர்.பி.ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறியதாவது: ‘ராஜேந்திரகுமார் இண்டலிஜன்ஸ் தலைவராக பதவி வகித்த காலக்கட்டத்தில் அளித்த இண்டலிஜன்ஸ் அறிக்கைகள் அனைத்தும் முஸ்லிம்களுக்கு எதிரானவையாகும். தீவிர ஹிந்துத்துவா குழுக்களுக்கு எதிராக எவ்வித அறிக்கையும் இவர் தயார் செய்து அளிக்கவில்லை.
முன்பு சட்டீஷ்கரில் பணியாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் ராஜேந்திரகுமார் மோடிக்கு அறிமுகமானார். அப்பொழுது பஞ்சாப், ஹரியானா, ஹிமாச்சல் பிரதேசம் ஆகிய மாநிலங்களுக்கு பா.ஜ.கவின் ஒருங்கிணைப்பாளராக இருந்த மோடி பின்னர் ராஜேந்திர குமாரை குஜராத் இண்டலிஜன்ஸ் தலைவர் பதவியை அளித்தார் என ஸ்ரீகுமார் கூறியுள்ளார்.
ராஜேந்திரகுமார் மீது விசாரணை நடத்தவேண்டும் என மனித உரிமை ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட் கோரிக்கை விடுத்துள்ளார். மத்திய இண்டலிஜன்ஸ்(உளவுத்துறை) அதிகாரிகளுக்கும், மாநில இண்டலிஜன்ஸ் அதிகாரிகளுக்கும் இடையே முறைகேடான உறவு இருந்துள்ளது என்பது இச்சம்பவத்தின் மூலம் நிரூபணமாகி உள்ளது. மத்திய இண்டலிஜன்ஸ் அறிக்கையை சுட்டிக்காட்டி இஷ்ரத் உள்பட நான்குபேரை கொலைச் செய்துள்ளனர் என ஸெடல்வாட் கூறியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment