ஜெய்பூர்:ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் அமைச்சர், பாஜக முன்னாள் எம்பி, 2 போலீஸ் அதிகாரிகள் உட்பட 17 பேர் மீது பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஹரியானா மாநிலத்தை சேர்ந்த ஒரு பெண் தனது கணவருடன் வேலை தேடி ராஜஸ்தானுக்கு வந்துள்ளார். அங்கு அந்த பெண்ணை முன்னாள் ராஜஸ்தான் அமைச்சர் ஜோகிஸ்வர்கார்க், பாஜக முன்னாள் எம்.பி. நிகல்சந்த்மொவால் மற்றும் போலீஸ் அதிகாரிகள் அமில் ராவ், மஹாவீர் உட்பட 17 பேர் பலாத்காரம் செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து அந்த 17 பேர் மீதும் பாலியல் பலாத்கார வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து வைஷாலி நகர போலீஸ் அதிகாரி ராய்சிங் பெனிவால் கூறியதாவது, புகார் தெரிவிக்கப்பட்ட 17 பேர் மீது கற்பழிப்பு, கொடுமைப்படுத்தி துன்புறுத்துதல், 3 நாட்கள் அல்லது அதற்கு மேற்பட்ட நாட்களுக்கு தவறான எண்ணத்துடன் அடைத்து வைத்தல், மிரட்டல், சதித்திட்டம் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.
0 கருத்துரைகள்:
Post a Comment