புதுடெல்லி:முன்னெச்சரிக்கையாக கைது செய்து காவலில் வைப்பதை காலவரையற்று நீட்டுவது அரசியல் சட்டத்திற்கு எதிரானது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. இந்நாட்டில் அதிகரிக்கும் வெளிநாட்டினர் மற்றும் குடிமக்களின் வாழ்வதற்கான உரிமையை மீறும் செயலாகும்.
சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்வர்களின் சார்பாக புகார் அளிப்பதில் தொழில்நுட்ப ரீதியான பிரச்சனைகள் இருந்தால் ஹேபியஸ் கார்பஸ்(ஆள்கொணர்வு மனு) மூலமாக இவர்களை ஆஜர்படுத்தி மக்களின் அடிப்படை உரிமையை பாதுகாப்பது நீதிமன்றத்தின் தர்மம் ஆகும் என நீதிபதிகளான எ.கே.கங்கூலி, ஜெ.எஸ்.கேஹர் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் தீர்ப்பளித்துள்ளது.
இந்திய குடிமக்கள் மட்டுமல்ல, இந்நாட்டில் வாழும் அனைத்து மக்களின் உரிமையை பாதுகாக்கும் கடமை நீதிபதிகளுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment