புதுடெல்லி:இம்மாதம் 26,27 தினங்களில் டெல்லி ராம் லீலா மைதானத்தில் நடைபெறவிருக்கும் சமூக நீதி மாநாட்டிற்கு அனைத்து மாணவர்களும் ஆதரவு தெரிவிக்க வேண்டுமென இந்தியாவின் பிரபலமாகி வரும் துடிப்பு மிக்க மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. இதுத்தொடர்பான அறிக்கையை அமைப்பின் தேசிய தலைவர் அனீஸுஸ்ஸமான், பொதுச்செயலாளர் சி.எ.ரவூஃப் ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.
’நீதியின் அடிப்படையில் தேசத்தை கட்டமைப்போம்’ என்ற மாநாட்டின் முழக்கத்திற்கு, அநீதிகள் முக்கிய பிரச்சனையாக மாறியிருக்கும் இந்தியாவில் மிகப்பெரிய முக்கியத்துவம் உள்ளது. ஒடுக்கப்பட்டவர்களுக்கு நீதி கிடைக்காது என்ற கொள்கையை இந்தியா பின்பற்றுகிறது. இச்சூழலில் அனைத்து மாணவர்களும் மாநாட்டின் செய்தியை பிரச்சாரம் செய்ய முன்வரவேண்டும் என கேம்பஸ் ஃப்ரண்ட் அழைப்பு விடுத்துள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment