ரியாத்/ஹைல்:மாணவர்களுடன் சென்று கொண்டிருந்த மினி பஸ் இன்னொரு வாகனத்துடன் மோதியதில் 12 பல்கலைக்கழக மாணவிகள் உள்பட 14 பேர் மரணித்துள்ளனர். நேற்று காலை ஹைலில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள மரீஃபகில் இவ்விபத்து நடந்துள்ளது.
கலீஃபத்து ஸுஹ்லா கிராமத்தில் இருந்து ஹைல் பல்கலைக்கழக மாணவர்களுடன் வந்து கொண்டிருந்த மினி பஸ் ஜீப் ஒன்றுடன் மோதியது. விபத்தில் பலியான மாணவர்கள் 18 வயதிற்கும் 23 வயதிற்கு இடைப்பட்டவர்களாவர்.
ஹைல் ஆளுநர் ஸஈத் அமீர் இப்னு அப்துல் முஹ்ஸின் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்த மாணவர்களை சந்தித்தார். விபத்துக் குறித்து விரிவான விசாரணை நடத்த நிபுணர் குழுவை நியமித்துள்ளதாக அவர் அறிவித்தார். ஹைல் போலீஸ் இயக்குநர் மற்றும் சுகாதாரத்துறை இயக்குநர் ஆகியோருடன் தொடர்பு கொண்டு அனைத்துவித சிகிட்சை ஏற்பாடுகளும் செய்யவேண்டும் என ஆளுநர் உத்தரவிட்டார்.
0 கருத்துரைகள்:
Post a Comment