Monday, November 21, 2011

கட்கரி-மோடி மோதல்: பா.ஜ.கவில் மீண்டும் கோஷ்டி பூசல் களைகட்டுகிறது

imagesCANQS465
புதுடெல்லி:உத்தரபிரதேச மாநிலத்தில் வருகிற 2012 ஆம் ஆண்டு சட்டப்பேரவைக்கான தேர்தல் நடைபெற இருக்கவே குஜராத் முதல்வர் நரேந்திரமோடி அம்மாநிலத்திற்கு பிரச்சாரம் செய்ய வரவேண்டாம் என முன்னரே கோரிக்கை விடுத்துள்ளார் பா.ஜ.கவின் தலைவர் நிதின் கட்கரி.

பா.ஜ.க தலைவர்களிடையே நடைபெற்றுவரும் கோஷ்டி பூசல் மீண்டும் ஒரு முறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது. முன்னர் பிரதமர் பதவியை குறிவைத்து மோடி நடத்திய நாடகங்களுக்கு எதிராக அத்வானி கும்பல் களமிறங்கியிருந்தது. அத்வானியின் மங்கிப்போன ரத யாத்திரை நேற்று டெல்லியில் களை இழந்து முடிவுற்ற வேளையில் கருத்துவேறுபாடு தீவிரமடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் மிகப்பெரியதும், முக்கியத்துவம் வாய்ந்ததுமான உ.பி மாநிலத்தின் சட்டப்பேரவை தேர்தல் 2012-ஆம் ஆண்டு நடைபெறவிருக்கிறது. மத்திய அரசின் எதிர்காலத்தை தீர்மானிக்கும் தேர்தல் பிரச்சாரத்திற்காக மோடி வர தேவையில்லை என கட்கரி முன்னெச்சரிக்கை விடுத்துள்ளார். குஜராத்திற்கு வெளியே மோடியின் பிரச்சாரம் கட்சிக்கு எவ்வித பலனையும் அளிக்கவில்லை என கட்கரி வெளிப்படையாகவே கூறியுள்ளார்.

பா.ஜ.கவின் இரு தலைவர்களிடையேயான கருத்துவேறுபாட்டின் தீவிரத்தை இந்த விமர்சனம் வெளிப்படுத்துகிறது. கட்சியின் உ.பி ஒருங்கிணைப்பாளராக சஞ்சய் ஜோஷியை நியமித்து மோடிக்கு முதல் ஷாக்கை அளித்தார் கட்கரி. மோடியின் எதிரியாக சஞ்சய் சிங் பா.ஜ.கவில் கருதப்படுகிறார். கடந்த சில மாதங்களாக மோடி-கட்கரி இடையே பிணக்கம் நிலவுவதாகவும், இருவரும் தொலைபேசியில் கூட பேசுவதில்லை என கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குஜராத்தில் சஞ்சய் ஜோஷி பா.ஜ.கவின் பொதுச்செயலாளராக பதவி வகித்த வேளையில் மோடி-ஜோஷி இடையே மோதல் உருவானது. கேசுபாய் பட்டேல் முதல்வராக பதவி வகித்த வேளையில் மோடியை டெல்லிக்கு கடத்திவிட்டு குஜராத் விவகாரத்தில் தலையிடக்கூடாது என கூறப்பட்டது. ஆனால், மோடியை முதல்வராக்கி டெல்லியிலிருந்து அனுப்பிய பொழுது சஞ்சய் ஜோஷியை டெல்லிக்கு நாடு கடத்தினார்கள். மும்பையில் பா.ஜ.கவின் தேசிய குழுவில் ஜோஷியின் இமேஜை சீர்குலைக்கும் சி.டியை விநியோகித்ததன் பின்னணியில் மோடி செயல்பட்டுள்ளதாக சஞ்சய் ஜோஷி குற்றம் சாட்டியிருந்தார்.

குஜராத் போலீஸ் முன்னாள் டி.ஜி.பியும், தற்பொழுது சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் கொலை வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள மோடியின் உறவினர் வன்சாராவிடம் சி.டி தயாரிக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகிறது. சிறையில் அடைக்கப்பட்டிருந்த குஜராத் மாநில முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா இதனை தூண்டியுள்ளார். மேலும் டெல்லியில் நடந்த பா.ஜ.க தேசிய குழுவில் சஞ்சய்ஜோஷி விவகாரம் காரணமாக மோடி பங்கேற்கவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza