திரிபோலி:ஏழு ஆயிரத்திற்கும் அதிகமானோர் லிபியாவின் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதாக ஐ.நா அறிக்கை கூறுகிறது.
பெண்கள், வெளிநாட்டவர், குழந்தைகள் ஆகியோர் இவர்களில் அடங்குவர். லிபியாவின் நிலைமைகளை குறித்து விவாதிக்க ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் கூட்டம் திங்கள் நடைபெறவிருக்கும் வேளையில் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. சில கைதிகள் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டதாகவும், சிலருக்கு பாரபட்சம் காட்டப்படுவதாகவும் ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூன் தயார் செய்த அறிக்கை கூறுகிறது.
கத்தாஃபி ஆதரவாளர்கள் என சந்தேகிக்கப்பட்டு இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கத்தாஃபி கொல்லப்பட்டதை தொடர்ந்து அவரது ஆட்சிக்காலத்தில் கைது செய்யப்பட்ட அரசியல் கைதிகள் விடுதலைச் செய்யப்பட்டுள்ளனர். ஆனால், நீதிமன்ற நடவடிக்கைகள் ஒழுங்குப்படுத்தப்படவில்லை. இதனால் புரட்சிப் படையினரின் செல்வாக்கு மிகுந்த பகுதிகளில் இவர்களின் விடுதலை சாத்தியமாகவில்லை. இதற்கிடையெ பனீ வலீத் என்ற இடத்தில் கத்தாஃபி ஆதரவாளர்களுக்கும், என்.டி.சி இடைக்கால அரசின் ராணுவத்தினருக்கும் இடையே நடந்த மோதலில் ஏழு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment