Friday, November 25, 2011

மாவோயிஸ்ட் தலைவர் கிஷன்ஜி மோதலில் படுகொலை

kishenji
கொல்கத்தா:மூத்த மாவோயிஸ்ட் தலைவர் கோட்டேஷ்வர் ராவ் என்ற கிஷன்ஜி மேற்கு வங்காள மாநிலம் ஜங்கல் மஹலில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில் கொல்லப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ஜாம்பூனி பகுதியில் நடந்த மோதலில் நான்கு மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர். இன்னொரு மாவோயிஸ்ட் தலைவரான சுசித்ரா மஹோட்டாவிற்கான தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.

மிட்னாப்பூரில் மேற்கு ஜர்க்ரம் காடுகளில் 48 மணி நேரமாக நடைபெறும் தேடுதல் வேட்டையில் கடுமையாக நடந்த மோதலில்தான் கிஷன்ஜியும், நான்கு மாவோயிஸ்டுகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza