புதுடெல்லி:பணம் கொடுத்து செய்தி வெளியிட்டது தொடர்பாக இந்தியாவில் பத்திரிகைகள் மீது 2009-ஆம் ஆண்டு முதல் 30 புகார்கள் ப்ரஸ் கவுன்சிலுக்கு கிடைத்துள்ளதாக செய்தி ஒலிபரப்பு இணை அமைச்சர் ஜய்வந்த் ராவ் மக்களவையில் தெரிவித்துள்ளார்.
சில புகார்கள் கவுன்சிலின் விசாரணை குழுவின் பரிசீலனையில் உள்ளன. சில புகார்களுக்கு காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. பணம் கொடுத்து செய்திகள் வெளியிடுவது குறித்த புகார்களை விசாரணை நடத்தும் அமைச்சரவை அளவிலான குழுவின் முதல் கூட்டம் செப்டம்பர் ஏழாம் தேதி நடைபெறும் என அமைச்சர் தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment