Wednesday, November 23, 2011

எடியூரப்பா மீது மேலும் வழக்கு

imagesCAGTU0ZB

பெங்களூர்:நிலபேர ஊழல் வழக்கில் கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சர் வி.சோமண்ணா மற்றும் இதர 2 பேர் மீது லோக் ஆயுக்தா நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

க்ரிமினல் நடவடிக்கை தொடர்பான பிரிவின் படி விசாரணை நடத்தி வருகிற டிசம்பர் 26-ஆம் தேதி அறிக்கையை சமர்ப்பிக்க போலீஸ் சூப்பிரண்டிற்கு லோக் ஆயுக்தா நீதிமன்ற நீதிபதி என்.கே.சுதீந்தர ராவ் உத்தரவிட்டுள்ளார்.

2009-ஆம் ஆண்டு சட்டத்தை மீறி சோமண்ணாவின் மனைவி ஷைலஜாவிற்கு சொந்தமான நாகதேவன் ஹல்லாவில் உள்ள கல்வி நிறுவனத்திற்கு 33,792 சதுர அடி நிலத்தை நிலவிடுவிப்பு செய்து எடியூரப்பா பதிவுச்செய்து அளித்துள்ளார் என சாஃப்ட்வெயர் பொறியாளர் ரவி கிருஷ்ணா ரெட்டி அளித்த புகாரில் கூறியுள்ளார்.

1998-ஆம் ஆண்டு பெங்களூர் வளர்ச்சி ஆணையம் முன்னர் கையகப்படுத்திய நிலத்தை எடியூரப்பா சோமண்ணாவின் மனைவின் பெயரில் பதிவுச்செய்து வழங்கியுள்ளார். அந்த நிலத்தில் கட்டிடம் கட்டியது சட்டவிரோதமாகும். புகாரில் ஷைலஜா, நிலத்தின் முன்னாள் உரிமையாளர் லிங்கராஜா ஆகியோரின் பெயர்களும் குறிப்பிடப்பட்டுள்ளன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza