பாக்தாத்:வடக்கு பாக்தாதில் சிறைக்கு வெளியே நடந்த கார் குண்டுவெடிப்பில் 19 பேர் கொல்லப்பட்டனர். 20 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது. பாக்தாதிலிருந்து 20 கி.மீ தொலைவில் உள்ள தாஜியில் ஹூத் சிறைக்கு அருகே வெடிப்பொருட்கள் நிரப்பிய கார் வெடித்ததாக பாதுகாப்பு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். சில தினங்களிடையே ஈராக்கில் நடக்கும் 3-வது குண்டுவெடிப்பாகும்.
சனிக்கிழமை அபூகரீப் மாகாணத்தில் நடந்த கண்ணிவெடித்தாக்குதலில் 10 பேரும், அதற்கு முந்தைய தினம் துறைமுக நகரமான பஸ்ராவில் சந்தையில் நடந்த குண்டுவெடிப்பில் 19 பேரும் கொல்லப்பட்டனர்.
சிறையிலிருந்து தப்புவதற்காக திட்டமிட்டு இக்குண்டுவெடிப்பு நடத்தப்பட்டதா? என்பது உறுதிச்செய்யப்படவில்லை என ஈராக் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 கருத்துரைகள்:
Post a Comment