Saturday, October 1, 2011

தனித் தெலுங்கானா பந்த்தால் முடங்கியது ஹைதராபாத்

telangana_796378f
ஹைதராபாத்: தனித் தெலுங்கானா வலியுறுத்தி, ஹைதராபாத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டத்தால், நகர் முழுவதும் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.

இதனிடையே, டெல்லியில் தெலுங்கான பிரச்னை தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ரயில் மறியல்,சாலை மறியல் என பல்வேறு வகையில் தெலுங்கானா பகுதிகளில் கடந்த 17 நாட்களாக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்தப் போராட்டம் மீண்டும் தீவிரமாகி வரும் நிலையில் நேற்று தெலுங்கானா பகுதியில்  எம்எல்ஏக்களின் வீடுகளுக்கு முன்பாக தெலுங்கானா போராட்டக் குழுவினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தெலுங்கானா கோரிக்கைக்காக ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி எம்எல்ஏக்களின் வீடுகளின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

இந்த நிலையில்,நேற்று ஹைதராபாத்தில் முழு அடைப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.  தெலுங்கானா கூட்டு நடவடிக்கை குழு இந்த முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதனால் ஹைதராபாத்தில் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி தலைவர் சந்திரசேகர ராவ் இன்று டெல்லி செல்கிறார். ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை சந்தித்து தெலுங்கானா கோரிக்கை குறித்து வலியுறுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza