Saturday, October 1, 2011

குஜராத் காவல்துறை அதிகாரி சஞ்சீவ் பட் கைது

Sanjeev_Bhatt_arrested_295
அஹமதாபாத்:குஜராத் காவல்துறை முன்னால் அதிகாரி சஞ்சீவ் பட் இன்று கைது செய்யப்பட்டர். குஜராத் இனப் படுகொலை வழக்கில் முதல்வர் நரேந்திர மோடிக்கு எதிராக பட் மிக முக்கியமான சாட்சிகளை பதிவு செய்திருந்தார்.

கலவரத்தின் போது மோடி வீட்டில் நடந்த கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துக்கள் கலவரத்தில் ஈடுபடுவதை தடுக்கவேண்டாம் என அந்த கூட்டத்தில் மோடி காவல்துறை அதிகாரிகளுக்கு கட்டளை இட்டதாக அதில் கூறி இருந்தார்.

இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதற்கு சாட்சியாக அப்பொழுது அவருடைய கார் ஓட்டுனராக இருந்த கே.டி.பன்தை திரு.பட் கூறியிருந்தார். ஆனால் பட் தன்னை வற்புறுத்தி சாட்சியாக கையெழுத்து போட வைத்ததாக பன்த் கடந்த ஜூன் மாதம் 24-ஆம் தேதி கொடுத்த புகாரின் பேரில் பட் இன்று கைது செய்யப்பட்டார்.

குஜராத் முன்னால் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் முக்கிய தடயங்களை அழிக்க வற்புறுத்தியதாக 2 நாட்களுக்கு முன்பு குஜராத் உயர் நீதிமன்றத்தில் பட் மற்றொரு மனு தாக்கல் செய்திருந்தார். இதைத் தொடர்ந்தே இந்த கைது நடந்திருப்பதாக மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

இது மோடி அரசின் பழி வாங்கும் செயல் என முன்னால் குஜராத் முதல்வர் சங்கர்ஸின் வகேலா கருத்து தெரிவித்துள்ளார். மனித உரிமைகளுக்காக போராடுபவர்களை வாய் மூட வைப்பதற்கான முயற்சி இது என கலவரத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்காக வழக்கில் வாதாடி வரும் வழக்கறிஞர் முகுல் ஸின்ஹா கருத்து தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட சஞ்சீவ் பட் விசாரனைக்காக அழைத்து செல்லப்பட்டிருக்கிறார். அவர் எங்கு அழைத்து செல்லப்பட்டார் என்ற விவரம் தெரிவிக்கப்படவில்லை.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza