Thursday, September 22, 2011

பங்குச் சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெரும் சரிவு

images
மும்பை:மும்பைப் பங்குச் சந்தையின் சென்செக்ஸ் மற்றும் தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடுகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்று கடும் பின்னடைவைச் சந்தித்தன.

இன்று சென்செக்ஸ் ஒரே நாளில் 704 புள்ளிகள் சரிந்து வர்த்தக முடிவில் 16,361.15 புள்ளிகளாக நிறைவுற்றது.

தேசியப் பங்குச் சந்தையின் நிப்டி குறியீடு 209.60 புள்ளிகள் சரிவடைந்து 4,923.65 புள்ளிகளாக நிறைவுற்றது.

இன்று பொதுவாக அனைத்து பங்குக் குறியீடுகளும் கடும் சரிவைச் சந்தித்துள்ளன. பங்குச் சந்தைகளில் முதலீடு செய்யும் உலக முதலீட்டாளர்கள் பணத்தைப் பாதுகாப்பாக அரசு பத்திரங்களில் முதலீடு செய்ததால் பங்குச் சந்தைகளிலிருந்து பெரும்தொகை இன்று முதலீடு நீக்கம் பெற்றது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza