எட்டாவா:தலித் இனத்தைச் சார்ந்த நபர் ஒருவர் உத்தர பிரதேசத்தில் உள்ள ஒரு அரசு அலுவலகத்திற்கு சென்று அவரது குறைகளை தெரிவிப்பதற்காக முயற்சி செய்தபோது ஐ.ஏ.எஸ் அதிகாரியால் கழுத்து சட்டையை பிடித்து வெளியில் தள்ளபட்டுள்ளார்.
அவர் கான்ஷி ராம் அவாஸ் யோஜ்னா என்ற நகர்ப்புற ஏழைகள் விடுதி பற்றி புகார் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது சிறப்பு முதன்மை செயலாளர் மற்றும் எட்டாவா மாவட்ட நீதிபதி ஆர்.பி. சிங்க் ஆகியோர் புகார் கொடுக்க வந்த தலித் நபரின் கழுத்துச் சட்டையை பிடித்து அங்ன்கன்வாடியை விட்டு வெளியே தள்ளியுள்ளார்.
தலித் இனத்தைச் சேர்ந்த மாயாவதி ஆட்சி செய்யும் மாநிலத்திலேயே இத்தகைய சம்பவம் நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment