Monday, September 12, 2011

குண்டுவெடிப்புக்கு பொறுப்பேற்று வந்தது நான்காவது இ-மெயில்

imagesCA3OTX2Z
புதுடெல்லி:டெல்லி உயர் நீதிமன்றம் குண்டுவெடிப்பிற்கு பொறுப்பேற்று மெயில்கள் வந்தவண்ணம் உள்ளன. இப்போது நான்காவதாக ஒரு மெயில் வந்துள்ளது.

13 உயிர்களை காவு கொண்ட குண்டுவெடிப்பிற்கு இந்தியன் முஜாஹிதீன்களாகிய நாங்கள்தான் காரணம் என்று அதில் இருந்தது. கடைசியாக வந்த இ-மெயில் chotoominani5@gmail.com என்ற முகவரியில் இருந்து வந்துள்ளது. இதே முகவரியில்தான் வியாழன் அன்று இரண்டாவது இ-மெயிலும் வந்தது.

அந்த மெயிலில்; “நமஸ்தே மீடியா பாயோ. தேர்ட் மெயில் ஆப்கோ மிலா வோ ஹமாரி தரஃப் சே ஹி பேஜ் கயாதி(மூன்றாவது மெயில் அனுப்பியது நாங்கள்தான்) பல திட்டங்கள் வகுத்து குண்டை வெடிக்கச் செய்தது நாங்கள் தான்” என்று குறிப்பிட்டுள்ளது.

மேலும் குஜராத்தின் அஹமதாபாத்தில் கூட்டம் நிறைந்த பகுதியில் குண்டை வெடிக்கச் செய்வோம் என்று அதில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza