திரிபோலி:லிபியாவின் முஅம்மர் கத்தாஃபியின் மகன் காமிஸ் கத்தாஃபி நேட்டோவின் தாக்குதலில் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இத்தகவலை எதிர்ப்பாளர்களின் செய்தி தொடர்பாளர் முஹம்மது ஸவாவி ஸ்லித்தான் நகரத்தில் நேற்று முன்தினம் நேட்டோ நடத்திய தாக்குதலில் காமிஸ் கத்தாஃபி கொல்லப்பட்டதாக அறிவித்துள்ளார். மேலும் இப்பகுதியில் நேட்டோ நடத்திய தாக்குதலில் 31 கத்தாஃபி ஆதரவு ராணுவத்தினரும் கொல்லப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.
கத்தாஃபியின் ராணுவத்தில் பல ஆண்டுகளாக தலைமை பதவியை வகித்து வருபவர் காமிஸ். ஸ்லித்தானில் ராணுவத்தின் கமாண்டராகவும் இவர் பணியாற்றினார். ஆனால் நேட்டோ இத்தகவலை உறுதிச்செய்யவில்லை. ஆனால், காமிஸின் மரண செய்தியை லிபிய அரசு மறுத்துள்ளது. ஆனால், நேட்டோவின் அக்கிரம தாக்குதலில் சிவிலியன்கள் கொல்லப்பட்டதாக அரசு குற்றம் சாட்டியுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment