பெங்களூர்:கர்நாடகா மாநிலத்தில் பா.ஜ.க அரசின் முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா நடத்தி ஊழல் ஆட்ட,பாட்டங்களின் முடிவில் பதவி விலகியதை தொடர்ந்து புதிய முதல்வராக பலத்த இழுபறிக்கு பிறகு சதானந்த கெளடா தேர்வுச்செய்யப்பட்டு பதவி ஏற்றார்.
இந்நிலையில் சதானந்தா கவுடா பெங்களூர் வளர்ச்சி குழுமத்திற்கு(பிடிஏ) சொந்தமான நிலத்தில் அனுமதியின்றி வணிக வளாகம் கட்டிவருவதாக பெங்களூரைச் சார்ந்த கே.ஜி.நாகலட்சுமிபாய் என்பவர் பொதுநல மனுவை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார்.
இம்மனுவில் கூறப்பட்டிருப்பதாவது:பெங்களூர் மாவட்டம், நெலகுன்டே கிராமத்தில் 24 ஏக்கர் 84 குன்டா (ஒரு குன்டா 1,089 சதுர அடி) வீட்டுமனை நிலத்தை சதானந்த கெளடாவுக்குப் பெங்களூர் வளர்ச்சிக் குழுமம் (பிடிஏ) ஒதுக்கியுள்ளது. தனக்கு ஒதுக்கப்பட்ட வீட்டுமனையை ஒட்டி அமைந்துள்ள மற்றொரு வீட்டுமனையை இணைக்க அனுமதி கோரி பிடிஏவிடம் சதானந்த கெளடா விண்ணப்பம் அளித்திருந்தார். அதைப் பரிசீலித்த பிடிஏ அவ்வாறு இணைக்க முடியாது என்று தெரிவித்து 2009 செப்டம்பர் 24-ம் தேதி கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அந்த 2 வீட்டு மனைகளை ஒன்றாக்கிக் கொண்டதோடு வீட்டுமனைக்கு ஒதுக்கப்பட்ட நிலத்தில் வணிக வளாகம் கட்டிவருகிறார் முதல்வர் சதானந்த கெளடா. இது பிடிஏ விதிகளுக்குப் புறம்பானது.
விதிகளை மீறி வணிக வளாகம் கட்டபட்டுவரும் நிலத்தைத் திரும்பப் பெற பிடிஏவுக்கு ஆணையிட வேண்டும். சதானந்தகெளடா மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும் என்று மனுதாரர் கோரியுள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment