Wednesday, August 3, 2011

டீஸ்டா ஸெடல்வாட்டிற்கு முன் ஜாமீன்

 
GERMANY-HUMAN-RIGHTS-PRIZEஅஹ்மதாபாத்:குஜராத் இனப்படுகொலை வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் பெயரில் தவறான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தார் என்ற வழக்கில் சமூக ஆர்வலர் டீஸ்டா ஸெடல்வாட்டிற்கு முன் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

25 ஆயிரம் ரூபாய் நீதிமன்றத்தில் கட்டிவிட்டு அடுத்த மூன்று தினங்களுக்குள் பாஸ்போர்ட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்கவேண்டும் என நீதிபதி எஸ்.பி.கஜ்ரா உத்தரவிட்டார். அழைக்கும் வேளையில் விசாரணை அதிகாரியின் முன்னால் ஆஜராகவும் டீஸ்டாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

டீஸ்டாவின் முன்னாள் உதவியாளர் ரஈஸ்கான் என்பவர் நரோதாகாம் வழக்கில் குற்றவாளிக்களுக்கு எதிராக பாதிக்கப்பட்டவர்களின் பெயரால் பொய்யான பிரமாணப்பத்திரம் தயாரித்து செசன்ஸ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார் என்ற குற்றச்சாட்டை எழுப்பியிருந்தார்.

அதேவேளையில், இனப்படுகொலையில் கொல்லப்பட்ட காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி இஹ்ஸான் ஸாப்ரியின் மனைவி ஸாக்கிய  ஸாப்ரியும் தானும் இணைந்து உச்சநீதிமன்றத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து குஜராத் அரசு தன்னை வேட்டையாடுவதாக டீஸ்டா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.ஜாமீன் வழங்கினால் டீஸ்டா சாட்சிகளை கலைத்துவிடுவார் எனவும், விசாரணைக்கு இடையூறு ஏற்படும் எனவும் மாநில அரசு எழுப்பிய வாதங்களை நிராகரித்த நீதிமன்றம் டீஸ்டாவுக்கு முன் ஜாமீன் வழங்கியது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza