Wednesday, August 3, 2011

முஸ்லிம்களுக்கு எதிரான கட்டுரை:சுப்ரமணிய சுவாமியின் மீது வழக்கு தொடர சிறுபான்மை கமிஷன் முடிவு

 
subramaniyaswamyபுதுடெல்லி:கடுமையான வகுப்புவாத வெறியுடன் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டுரை எழுதிய சுப்ரமணியசுவாமி மீது வழக்கு தொடர தேசிய சிறுபான்மை கமிஷன் முடிவுச்செய்துள்ளது.

மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டி.என்.எ பத்திரிகையில் சுப்ரமணிய சுவாமி முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும் உள்பட கடுமையான வகுப்புவாத விஷக்கருத்துக்களை கக்கியிருந்தார். இதுத்தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தலைவர் வஜஹத் ஹபீபுல்லாஹ் தலைமையில் கூடிய கமிஷனின் கூட்டத்தில் சுப்ரமணிய சுவாமி மீது சமூகங்களிடையே பகை உணர்வை வளர்த்த முயலும் குற்றத்திற்கான வழக்கை பதிவுச்செய்ய தீர்மானிக்கப்பட்டது.

இதுத்தொடர்பாக வஜஹத் ஹபீபுல்லாஹ் கூறியதாவது: கமிஷனின் வழக்கறிஞருடன் கலந்தாலோசித்த பிறகு வல்லுநர்களின் ஆலோசனை பெறப்படும். இரண்டு தினங்களுக்குள் முதல் தகவல் அறிக்கை பதிவுச்செய்யப்படும். இந்திய குற்றவியல் சட்டத்தின் கடுமையான பிரிவுகளை சுப்ரமணியசுவாமி மீறியுள்ளார் என தெரிவித்தார்.

சுப்ரமணிய சுவாமியை கைதுச் செய்ய மஹராஷ்ட்ரா சிறுபான்மை கமிஷன் கோரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் கடந்த மாதம் நடந்த தொடர்குண்டுவெடிப்பு நிகழ்ந்து மூன்றாவது நாள் ‘இந்தியாவில் இஸ்லாமிய தீவிரவாதத்தை எவ்வாறு துடைத்து எறியலாம்’ என்ற தலைப்பில் சுப்ரமணிய சுவாமி சர்ச்சைக்குரிய கட்டுரை ஒன்றை எழுதினார்.

ஹிந்து பாரம்பரியத்தை அங்கீகரிக்காத முஸ்லிம்களின் வாக்குரிமையை பறிக்கவேண்டும், ஹிந்துக்களிடையே உள் பீதியை ஏற்படுத்துவதற்கு முஸ்லிம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துகின்றனர். ஹிந்துக்கள் முஸ்லிம் மத அடிப்படைவாதிகளுக்கு எதிராக ஒன்றுபடவேண்டும், இதற்காக யூதர்களிடமிருந்து பாடம் கற்றுக்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விமர்சனங்கள் சுப்ரமணிய சுவாமி எழுதிய கட்டுரையில் அடங்கியிருந்தன. இக்கட்டுரை சர்ச்சையை கிளப்பியதைத் தொடர்ந்து சுப்ரமணிய சுவாமியுடனான அனைத்து தொடர்புகளையும் துண்டிக்கவேண்டும் என ஹாவர்ட் பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகிகளுக்கு புகார் அளித்துள்ளனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza