கெய்ரோ:மக்கள் எழுச்சிப் போராட்டத்தை தொடர்ந்து பதவி விலகிய எகிப்தின் முன்னாள் சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக் மீதான விசாரணை இன்று துவங்கவுள்ளது. இந்நிலையில் அவர் நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராவது சந்தேகமே என பல்வேறு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
உடல்நிலை பாதிக்கப்பட்ட ஹுஸ்னி முபாரக் விசாரணை நீதிமன்றத்தில் நேரடியாக ஆஜராகமாட்டார் என அல் மிஸ்ர் அல் யவ்ம் பத்திரிகை கூறுகிறது. அதற்கு பதிலாக விசாரணை நடைபெறும், போலீஸ் அகடாமியுடன் இணைந்துள்ள ஹாலில் அவரை அனுமதிக்கப்படும் என கருதுவதாக அப்பத்திரிகை கூறுகிறது. போலீஸ் கஸ்டடியில் இருக்கும் வேளையில் முபாரக்கை இதயம் தொடர்பான நோயை தொடர்ந்து கெய்ரோவில் ராணுவ மருத்துவமனையில் அனுமதித்தனர். பின்னர் அவர் சுயநினைவை இழந்துவிட்டதாக செய்திகள் வெளியாயின.
ஆனால், அவர் குணமடைந்துவிட்டதாக சுகாதாரத்துறை அமைச்சர் அம்ர் ஹெல்மி நேற்று முன்தினம் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். விசாரணை வேளையில் தேவை ஏற்பட்டால் அவருக்கு தேவையான சிகிட்சை உதவி அளிக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார். முபாரக்கின் உடல் நிலை தேறியுள்ளதாக ப்ராஸிக்யூட்டர் ஜெனரலும் நேற்று முன் தினம் அறிவித்திருந்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment