வாஷிங்டன்:அமெரிக்காவின் பிரபல க்ரெடிட் ரேட்டிங் ஏஜன்சியான(சர்வதேச கடன் தர வரிசை) ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவின் தரவரிசையை குறைத்துள்ளது. ட்ரிப்பிள் ஏ(AAA) என்ற நிலையிலிருந்து ஏஏ+(AA+) என்று குறைத்துள்ளது.கடன் வரம்பு மசோதா கடந்த வியாழக்கிழமை அமெரிக்க காங்கிரஸில் நிறைவேறிய பிறகும் நாட்டின் பொருளாதாரநிலைமை பாதுகாப்பானது அல்ல என்பதற்கான அறிகுறியை தொடர்ந்து ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் க்ரெடிட் ரேட்டிங்கை குறைத்துள்ளது.
உலகிலேயே அரசுகள் மற்றும் நிறுவனங்களின் க்ரெடிட் ரேட்டிங்கை உறுதிச்செய்யும் மூன்று முக்கிய ஏஜன்சிகளில் ஸ்டாண்டர்ட் அண்ட் பூவர் ஒன்றாகும். கடந்த 70 ஆண்டுகளாக இந்த ஏஜன்சியின் மிகச்சிறந்த ரேட்டிங்கை பெற்ற நாடுதான் அமெரிக்கா என்பது குறிப்பிடத்தக்கது.

0 கருத்துரைகள்:
Post a Comment