அமெரிக்காவில் பாதி முஸ்லிம்களும் பாரபட்சத்தை சந்திக்கிறார்கள்
வாஷிங்டன்:அமெரிக்காவின் முஸ்லிம் மக்கள் தொகையில் பாதி பேரும் இனரீதியான மதரீதியான பாரபட்சத்தை எதிர்கொள்கின்றார்கள் என ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தை மையமாக கொண்டு செயல்படும் அபுதாபி காலப் செண்டர் நடத்திய ஆய்வில் 48 சதவீத அமெரிக்க முஸ்லிம்களும் தாங்கள் இனரீதியாக மதரீதியாக பாரபட்சத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். இது கடந்த ஆண்டிற்கான புள்ளிவிபரமாகும்.
2001 செப்டம்பர் 11 நியூயார்க் உலக வர்த்தக மையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 10-வது ஆண்டு நினைவு தினத்திற்கு இன்னும் ஒருமாதம் பாக்கியிருக்கவே இந்த சர்வே நடத்தப்பட்டுள்ளது. இத்துடன் அமெரிக்க ராணுவத்தைக் குறித்தும், எஃப்.பி.ஐக் குறித்தும் அமெரிக்க முஸ்லிம்களுக்கு நல்ல அபிப்ராயம் இல்லை என ஆய்வு தெரிவிக்கிறது.
பயங்கரவாதத்திற்கு எதிரான போர் முஸ்லிம்களை குறிவைத்தே நடத்தப்படுகிறது என அமெரிக்க முஸ்லிம்கள் தெரிவித்துள்ளனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment