மொகாதிஷு:பட்டினியால் அவதியுறும் ஆப்பிரிக்க நாடான சோமாலியாவில் கடந்த மூன்று மாதங்களிடையே 29 ஆயிரம் குழந்தைகள் மரணித்துள்ளனர்.
சோமாலியாவின் மேலும் 3 பிரதேசங்களை பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதியாக ஐ.நா பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து அமெரிக்காவின் உண்மையை கண்டறியும் குழு இந்த உண்மையை வெளியிட்டுள்ளது.முன்னர் இரண்டு பிரதேசங்களை ஐ.நா பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தியது.
சோமாலியாவின் தெற்கு பகுதி முழுவதும் ஆறுவாரத்திற்குள் பட்டினி பிரதேசமாக மாறும் என ஐ.நாவின் உணவு மற்றும் விவசாயத்திற்கான ஏஜன்சி அறிவித்துள்ளது.
10 ஆயிரம் பேரில் தினமும் 2 பேர் உணவு கிடைக்காமல் பட்டினியால் மரணிக்கும் பொழுதும், 20 சதவீத மக்கள் பட்டினியால் வாடும்பொழுதும் அப்பிரதேசத்தை ஐ.நா பட்டினியால் பாதிக்கப்பட்ட பகுதியாக பிரகடனப்படுத்தும்.
மூன்று லட்சம் மக்கள் உதவி கிடைக்காவிட்டால் மரணிக்கும் நிலையில் உள்ளனர். பட்டினி பிரதேசங்களில் நான்கு லட்சம் பேர் உள்ளனர். அதேவேளையில் சோமாலியா விவகாரத்தை விவாதிப்பதற்காக இம்மாதம் ஒன்பதாம் தேதி நடைபெறவிருந்த ஆப்பிரிக்க யூனியன் மாநாடு இரண்டு வாரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட கால அளவை குறிப்பிட இயலாது என யூனியனின் கொள்கை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே மொகாதிஷுவில் பாட்படோ முகாமில் உணவுப் பொருட்களை கொள்ளையடிக்க வந்த ஆயுதம் ஏந்தியவர்கள் 10 பேரை கொலைச் செய்தனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment