புதுடெல்லி:விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதத்துக்கு மத்திய அரசு ஒப்புக் கொண்டுள்ளது.
அனைத்துக் கட்சிகளும் ஒப்புக் கொள்ளக் கூடிய வகையில் விலைவாசி உயர்வு தொடர்பாக தீர்மானம் வடிவமைக்கப்படும் என நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் பவன்குமார் பன்சால் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்தும் வழிமுறைகள் குறித்து தீர்மானத்தில் இடம்பெறும்.
இப் பிரச்னை தொடர்பாக புதன்கிழமை நடைபெறும் விவாதத்தின் இறுதியில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி பதிலளிப்பார்.
விலைவாசி உயர்வு தொடர்பாக மக்களவையில் வாக்கெடுப்புடன் கூடிய விவாதம் வேண்டும் எனக் கோரி பா.ஜ.க. உறுப்பினர் யஷ்வந்த் சின்ஹா, ஐக்கிய ஜனதா தளத் தலைவர் சரத் யாதவ் ஆகியோர் நோட்டீஸ் அளித்துள்ளனர். காங்கிரஸ் உறுப்பினர் கே.எஸ்.ராவும் இது தொடர்பாக நோட்டீஸ் அளித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment