Tuesday, August 2, 2011

கஸ்டடி மரணம்:மீண்டும் மோதல் சூழலை நோக்கி கஷ்மீர்

 
a7d741c0-a519-4fdb-b562-8db51ae750eeஸ்ரீநகர்:ஸோப்போரில் சிறப்பு நடவடிக்கை குழு(SOG) கஸ்டடியில் எடுத்து விசாரணை நடத்திய இளைஞர் மரணமடைந்ததை தொடர்ந்து ஒரு இடைவேளைக்கு பிறகு கஷ்மீர் பள்ளத்தாக்கில் மீண்டும் மோதல் சூழல் உருவாகியுள்ளது.

ஒருவழக்கு தொடர்பாக சிறப்பு நடவடிக்கை குழு போலீஸார் கடந்த சனிக்கிழமை ஸோப்போர் நகரத்தை சார்ந்த 28 வயதான நாஸிம் ராஷித் என்ற இளைஞரை விசாரணைக்கு அழைத்துச்சென்றனர். விசாரணையில் போலீஸின் அரக்கத்தனமான சித்திரவதையின் காரணமாக நாஸிம் இறந்துவிட்டார். இச்சம்பவத்தை கண்டித்து தெஹ்ரீக்-இ-ஹூர்ரியத் தலைவர் செய்யத் அலிஷா கிலானி நாளை கஷ்மீரில் முழு அடைப்பிற்கு அழைப்பு விடுத்துள்ளார்.

இதுக்குறித்து கிலானி கூறியதாவது:மாநில போலீசாரின் முழுமையான மனித உரிமை மீறல்தான் நாஸிமின் படுகொலையாகும்.ஸோப்போரிலும் அண்மையிலுள்ள பிரதேசங்களிலும் ராணுவமும், போலீஸாரும் இணைந்து வீடுகள் தோறும் ரெய்டு நடத்துகின்றனர்.இது மக்களிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது என அவர் குற்றம்சாட்டினார்.

அதேவேளையில், முதல்வர் உமர் அப்துல்லாஹ்வின் விசாரணைக்குறித்த அறிக்கையில் நம்பிக்கையிருப்பதாக நாஸிமின் தந்தை அப்துற்றஷீத் ஷல்லா தெரிவித்துள்ளார்.கொடூரமான தாக்குதலில் நாஸிம் கொல்லப்பட்டுள்ளார். தாக்குதல்களின் அடையாளம் இல்லாத ஒரு பகுதி கூட நாஸிமின் உடலில் இல்லை எனவும் ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியான அப்துற்றாஷித் கூறுகிறார். மேலும் அவர் கூறியதாவது:

சில தினங்களுக்கு முன்பு சிவிலியன் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்தில் போலீஸார் நிரபராதியான நாஸிமை பிடித்துச்சென்றனர்.கடந்த மாதம் 30-ஆம் தேதி மதியம் 2 மணிக்கு தங்களுடைய கடைக்கு வந்த ராணுவ மேஜர் நாஸிமை விசாரிக்க துவங்கினார். நாஸிம் தான் நிரபராதி என்பதை அவருக்கு புரியவைக்க முயற்சித்தபோதும் மேஜர் அவனை கஸ்டடியில் எடுக்க முனைந்தார். மாலையில் அவனை விடுதலைச்செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அழைத்துச்சென்றார்.

ஆனால், மாலையில் நாஸிமை காணாததால் மேஜரை தொடர்புக்கொண்டோம்.அப்பொழுது அவர் நாஸிமை சிறப்பு நடவடிக்கை குழு போலீஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக தெரிவித்தார்.பின்னர் எனது மகனின் மரணவார்த்தையைத்தான் கேட்டேன்.இவ்வாறு அப்துற்றாஷித் கூறினார்.

நாஸிமின் மரணத்தை கண்டித்து போராட்டங்கள் நடைபெற இருப்பதால் மாநில பாதுகாப்பு நடவடிக்கைகள் வலுப்படுத்தப்பட்டுள்ளன.ஹூர்ரியத் மாநாட்டுக்கட்சியின் தலைவர்கள் தவிர பி.டி.பி தலைவி மஹ்பூபா முஃப்தியும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza