Saturday, August 13, 2011

நமதூருக்கு ஒதுக்கப்பட்ட கல்வி உதவித்தொகை 2,25,000 ரூபாய்-பாப்புலர் ப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு பாராட்டு

அரசாங்கம் கல்வி ரீதியாக சிறுபான்மை மக்களுக்கு சில சலுகைகளை வழங்கி வருகிறது. அதனை பெற்று கொள்வதற்கு ஒவ்வொரு சமூகத்துவரும் பல்வேறு முயற்சிகளை மேற்கொள்வார்கள். ஆனால் முஸ்லிம்கள் தரப்பில் இருந்து எந்த வித முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை என்பது வருத்ததிற்குரிய விஷயமாக இருந்தது. இந்நிலையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கல்வி உதவி தொகையை சிறுபான்மை மக்களுக்கு பெற்று கொடுக்க வேண்டுமென  முடிவு செய்தது.

அதற்கான விழிப்புணர்வு பிரச்சாரங்களையும், துண்டு பிரசுரங்களையும், சுவரொட்டிகளையும் தமிழகத்தில் உள்ள சின்னஞ் சிறு கிராமம் முதல் மிக பெரிய நகரங்கள் வரை கொண்டு சேர்த்தது. அதிலிருந்து ஒரு படி மேலே சென்று ஒவ்வொரு கிராமங்களிலும் கல்வி உதவி தொகையை பெருவதற்கான விண்ணப்பப் படிவங்களை விநியோகிப்பது. மேலும் அப்படிவங்களை பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பது என சமூக பணிகளை முன்னெடுத்து சென்றது. இதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் முஸ்லிம்கள் பயனடைந்தனர்.


இதே போன்ற பணி கடந்த வருடம் ஜூன் மாதம் நமதூரிலும் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்டது. புதுவலசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் வைத்து விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்தனர் பாப்புலர் ப்ரண்டின் உறுப்பினர்கள். இதனுடைய முக்கியத்துவத்தை நமதூர் மக்கள் மத்தியில் துண்டு பிரசுரங்கள் மூலம் விழிபுணர்வு ஏற்படுத்தினர். அதன் விளைவாக பூர்த்தி செய்யயப்பட்ட விண்ணப்பங்கள் நமதூர் பள்ளியின் உதவியுடன் சம்பந்தப்பட்ட கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்டது. அல்லாஹ் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் முயற்சியை பொருந்தி கொண்டான்.

அதன் காரணமாக நமதூர் அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப்பள்ளிக்கு கல்வி உதவித்தொகை ஒதுக்கப்பட்டுள்ளது. அரபி ஒலியுல்லாஹ் ஆரம்பப் பள்ளிக்கு 158 மாணவர்களுக்கும், அரபி ஒலியுல்லாஹ் உயர் நிலைப் பள்ளிக்கு 67 மாணவர்களுக்கும் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. மொத்தம் இரண்டு லட்ச்சத்தி இருபத்தி ஐயாயிரம் ரூபாய் (2,25,000) ஒதுக்கப்பட்டது மிகவும் பாராட்டுக்குறியது .நமதூருக்கு கல்வி உதவி தொகை பெருமளவில் ஒதுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கடும் முயற்சியால் இந்த உதவித் தொகை கிடைத்தது என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் நிர்வாகிகளை மக்கள் வெகுவாக பாராட்டினர். இது போன்ற சமூக பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மென்மேலும் தொடர ஏக இறைவனை பிரார்திப்போம். இந்த பணிகளுக்காக puduvalasai.tk சார்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவிற்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

செய்தி : சகோதரர் அஸ்லம்

1 கருத்துரைகள்:

ravi said...

congrats

Post a Comment

Dua For Gaza