கொச்சி:பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும் சுதந்திர தினத்தன்று தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் சுதந்திர போராட்ட தியாகிகளின் தியாகத்தை நினைவுக்கூறும் விதமாக நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் வகையில் சுதந்திர தின அணிவகுப்பை கடந்த சில ஆண்டுகளாக நடத்தி வருகிறது.இந்நிலையில் கடந்த ஆண்டு கேரள மாநிலத்தில் இஸ்லாத்தின் இறுதி தூதர் முஹம்மது நபி(ஸல்…) அவர்களை அவமதிக்கும் விதத்தில் கேள்வித்தாள் தயாரித்த கேரளமாநிலம் தொடுபுழா நியூமன் கல்லூரி பேராசிரியர் ஜோசஃப் யாரோ சில நபர்களால் கை துண்டிக்கப்பட்டார். இச்சம்பவத்தில் போலீஸாரும், ஊடகங்களும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மீது குற்றம் சாட்டின. இதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டும் கேரள மாநிலத்தில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்த தடை விதிக்கப்பட்டது.
இவ்வாண்டு கேரள மாநிலத்தில் புனலூர், தாமரச்சேரி, மஞ்சேரி, சாவக்காடு ஆகிய நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்தப்போவதாக கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அறிவித்தது. ஆனால், இந்த நான்கு நகரங்கள் இடம்பெற்றுள்ள மாவட்ட ஆட்சி தலைவர்கள் அணிவகுப்பை நடத்த தடைவிதித்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர்களின் இந்த அராஜக நடவடிக்கையை எதிர்த்து கேரள மாநில பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் பொதுச்செயலாளர் பி.அப்துல் ஹமீத் உயர் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.இம்மனு மீதான விசாரணையை நடத்திய கேரள உயர்நீதிமன்றம் மாவட்ட ஆட்சித் தலைவர்களின் தீர்மானத்தில் தலையிட மறுத்து தீர்ப்பளித்தது.

0 கருத்துரைகள்:
Post a Comment