நமதூரிலிருந்து பனைக்குளம் செல்வதற்கு இலகுவான பாதையாக உமர் ஊரணி வழியாக பாதை அமைக்கப்பட்டிருந்தது. இந்த பாதை நமதூர் மக்களுக்கும், பனைக்குளத்தை சேர்ந்தவர்களுக்கும் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. இதனால் அதிகம் பயனடைந்தவர்கள் நமதூர் மாணவ மற்றும் மாணவியர்கள்.
நமதூரிலிருந்து பனைக்குளத்திற்கு படிக்க செல்லும் மாணவர்கள் தங்கள் சைக்கிள் பயணத்தை இந்த பாதை வழியாக பயன்படுத்தி வெறும் 10 நிமிடத்தில் பள்ளிக்கு செல்லும் அளவிற்கு சாலை நன்றாக இருந்தது. அது பயனுள்ளதாக அனைவரும் கருதினர்.
ஓரிரு ஆண்டுகளில் அந்த சாலை பழுதடைந்தது. இந்த சூழ்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு அந்த சாலை செம்மண்ணால் புதிப்பக்கபட்டது. எனினும், அவ்வழி சாலை நிரந்தரமானதாக இருக்காது. மழைகாலம் துவங்க இருக்கும் இந்நேரத்தில் செம்மண் சாலை மீண்டும் பழுதடைந்து விடும் என்ற அச்சம் நம்மில் பலருக்கு இருந்தது. அவ்வச்சத்தை போக்கும் விதமாக ஓரிரு வாரங்களுக்கு முன்னாள் கொட்டப்பட்ட சரளிகற்கள், நமதூர் வாசிகள் அனைவரின் பார்வைக்கும் எட்டியது.
அதன் பயனாக இன்று தார் பாதை அமைக்கும் வேலை துவங்கப்பட்டுள்ளது. மழை காலம் வரும் முன்னரே அச்சாலை புதுபிக்க ஆவண முயற்சிகள் செய்ய வேண்டும் என்பது நமதூர் மக்களின் கருத்தாகும். அல்லாஹ் அதற்கு உதவி செய்வானாக.
செய்தி : சகோதரி அனிஷா பைசல்


0 கருத்துரைகள்:
Post a Comment