Wednesday, July 27, 2011

ப்ரெவிக்குடன் தொடர்பு:பிரிட்டீஷ் அமைப்பு ஒப்புதல்

 
Norway-Anders-Breivik-007லண்டன்:நார்வே கொலையாளி ஆண்டேர்ஸ் பெஹ்ரிங் ப்ரெவிக்குடன் தொடர்பிருப்பதாக பிரிட்டனில் தீவிர வலதுசாரி அமைப்பான இங்கிலீஸ் டிஃபன்ஸ் லீக்(இ.டி.எல்) ஒப்புக்கொண்டுள்ளது.

கடந்த ஆண்டு மார்ச் மாதம் லண்டனுக்கு வந்த ப்ரெவிக் நெதர்லாந்தை சார்ந்த வலதுசாரி அரசியல்வாதியான கீர்த் வில்டேர்சுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளான். அமைப்பு தலைவர்களுடன் ப்ரெவிக் பேச்சுவார்த்தை நடத்தியதாக இ.டி.எல் தலைவர் டாரில் ஹோப்ஸன் தெரிவித்துள்ளார். அமைப்பின் உறுப்பினர்களுடன் ப்ரெவிக் ஃபேஸ் புக் மூலமாக தொடர்பு கொண்டார் என அவ்வமைப்பின் இன்னொரு தலைவர் கூறியதாக டெய்லி டெலிகிராஃப் தெரிவித்துள்ளது.


நார்வேயில் தாக்குதல் நடத்துவதற்கு லண்டனிலில் உள்ள அமைப்பிடமிருந்து ஊக்கம் அளிக்கப்பட்டதாக ப்ரெவிக்கின் வாக்குமூலத்தை தொடர்ந்து ஸ்காட்லாந்து யார்டு போலீஸ் விசாரணையை துவக்கியுள்ளது. இச்சம்பவம் தீவிர கடுமையானது என பிரதமர் டேவிட் காமரூன் தெரிவித்துள்ளார். இ.டி.எல் அமைப்பு பிரிட்டனில் தடைச் செய்யப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza